இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக நடிப்பிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து கமல்ஹாசன் எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக தோன்றி ஸ்ருதிஹாசனுடன் படு ரொமான்ஸ் செய்திருக்கிறார். அதற்கான ப்ரோமோ நேற்று வெளியானது. இந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜை நடிகை காயத்ரி பயங்கரமாக கலாய்த்திருக்கிறார்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலேயே தன்னை ஒரு நல்ல இயக்குநர் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். அந்தப் படத்தை பார்த்த பலரும் கண்டிப்பாக இந்த இயக்குநர் பெரிய ஆளாக வருவார் என்று கணிக்க ஆரம்பித்தனர். அந்த கணிப்பை சரியாக்கும் விதமாக அமைந்தது அவரது இரண்டாவது படமான கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி ஒரே இரவில் லோகேஷின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ். தொடர்ந்து தனது ரோல்மாடலான கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக ஒரு தரப்பிடம் அந்தப் படம் அடி வாங்கினாலும் பெரும்பாலானோரிடத்தில் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. 400 கோடி ரூபாய்வரை வசூலித்து இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநராக லோகேஷை மாற்றியது.
இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது. முக்கியமாக லோகேஷ் கனகராஜின் பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது எல்சியூ. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் விக்ரம் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் லியோ திரைப்படத்தில் எடுபடவில்லை. மேலும் வேண்டுமென்றே இதில் எல்சியூவை லோகேஷ் திணித்திருக்கிறார் என்ற விமர்சனம்தான் மிஞ்சியது. இப்படி லியோவில் அவர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் அவருக்கான டிமாண்ட் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜ் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றிய அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து, கமல் தயாரித்து எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதற்கான ப்ரோமோ நேற்று வெளியானது. அதில் ஸ்ருதிஹாசனுடன் சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார் லோகேஷ். இதனைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் செய்வதை பார்த்த நடிகை காயத்ரி தனது எக்ஸ் பக்கத்தில், “உங்கள் படத்தில் ரொமான்ஸ் செய்தால் தலையை வெட்டிட்டு.. இது என்னமா?” என்று கேள்வி எழுப்பி லோகேஷை கலாய்த்திருக்கிறார். அதாவது விக்ரம் படத்தில் ஃபகத் பாசிலுக்கும் காயத்ரிக்கும் சில ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும். ஆனால் படத்தின் கதைப்படி காயத்ரியின் தலை வெட்டப்பட்டுவிடும். அதைத்தான் அவர் இப்படி காமெடியாக குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளே பெரும்பாலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக வெளியான லியோ திரைப்படத்தில்தான் ஹீரோயின் சாகாமல் இருந்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் முன்னர் கேட்டபோது தனக்கு ரொமான்ஸ் காட்சிகள் எடுக்கவோ, எழுதவோ வராது என்று அவர் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.