தனுஷிடம் இருந்து விவாகரத்து கோரியிருக்கும் இந்த நேரத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மன வேதனையில் தான் ஐஸ்வர்யா இப்படி கருத்து தெரிவித்தாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்தாலும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் நம்பினார்கள். இந்நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். கடந்த வாரம் தான் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துவிட்டார் நீதிபதி. இந்த ஆறு மாத காலத்திற்குள் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்துவிட வேண்டும் கடவுளே என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில் தனுஷை தன் வீட்டிற்கு வரவழைத்து பேசியிருக்கிறார் ரஜினி. ஆனால் விவாகரத்து முடிவில் எந்த மாற்றமும் இல்லை என ஐஸ்வர்யா தன் அப்பாவிடம் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்ஸ்டா ஸ்டோரியில் கருத்து தெரிவித்துள்ளார் ஐஸ்வவர்யா. அவர் கூறியிருப்பதாவது:-
உங்களை யாருக்கும் பிடிக்காவிட்டால் அதை ஏற்கும் நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு தான் அன்பாகவோ, பாசமாகவோ இருந்தாலும் கூட அனைவரும் ஏற்கும் வகையில் திருப்திபடுத்தவே முடியாது. நீங்கள் பிரகாசமான சூரிய ஒளியாக இருந்தாலும் மக்கள் உங்களை வெறுப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு மழை பழக்கமாகிவிட்டது. அதையும் தாண்டி ஜொலிப்பதில் திருப்தி கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.
விவாகரத்து விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யாவை விமர்சிக்கிறார்கள். அதை எல்லாம் பார்த்துவிட்டு தான் மன வேதனை தாங்காமல் இப்படி ஸ்டோரி போட்டிருக்கிறார் போன்று என பேச்சு கிளம்பியுள்ளது.