விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூன்றாவது முல்லையாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை லாவண்யாவும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை தான் எப்படி சந்தித்தேன் என்பதை சமீபத்திய பேட்டியில் மனவேதனையுடன் தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை உலகளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பல புகார்கள் கிளம்பி உள்ளன. பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் மீது பல நடிகைகள் புகார் அளித்த நிலையில், அவருக்கு சிறை தண்டனையே கிடைத்துள்ளது. மேலும், பலர் இந்த விவகாரத்தில் சிக்கினாலும், மீ டூ இயக்கம் எல்லாம் விஸ்வரூபம் எடுத்தாலும் இன்னமும் சினிமா மற்றும் சீரியலில் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரம் எப்படி சிக்காமல் பண்ணலாம் என்கிற திருட்டுத்தனத்துடன் தொடர்ந்து கொண்டே இருப்பதாக பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவ்வப்போது பேட்டிகளில் ஓபனாக பேசி பகீர் கிளப்பி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல். அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் காவ்யா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்க அந்த சீரியலில் இருந்து சிட்டாக பறந்து விட்டார். கடைசியாக அந்த முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா எனும் இளம் நடிகை நடித்தார். சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் லாவண்யா.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சின்னத்திரை தொடர்களில் நடிக்கவே தன்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி தொல்லை பண்ணாங்க, டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எழுதிட்டு நல்ல வேலைக்குப் போக நினைத்தேன். சினிமாவில் நடிக்க ஆசை வந்து அதில், முயற்சித்தேன். அங்கே பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சீரியலில் நடிக்கலாம் என்று பார்த்தால் இங்கேயும் அதே டார்ச்சர். ஆனால், அதெல்லாம் நமக்கு செட்டாகாது என ஒதுங்கியிருந்த போதுதான் திறமைக்கும் இங்கே சிலர் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதை புரிந்துக் கொண்டேன். சிப்பிக்குள் முத்து சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அப்படித்தான் வந்தது. இப்போது நல்லா சம்பாதித்து என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். பல நடிகைகள் குறுக்கு வழியில் போகாமல் நேர் வழியில் நடிக்கும் வாய்ப்புகளை பெற பல போராட்டங்களையும் தியாகங்களையும் கடந்து தான் வந்திருக்கின்றனர் என அவர் பேசியுள்ளார்.