பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகரானார். இதனைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும், பிரதான பாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
தற்போது, ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ’டிராகன்’ என்கிற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இயக்குநர் சுதா கொங்காராவின் உதவி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க உள்ளதாகவும் அதில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மமிதா பைஜூ சூப்பர் சரண்யா படத்தில் கவனம் பெற்றார். தொடர்ந்து, பிரேமலு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தென்னிந்திய ரசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.