தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி புகைப்படங்கள் வைரல்!

நடிகை அஞ்சலி தனது 38ஆவது பிறந்தநாளை சமீபத்தில்தான் கொண்டாடினார். இதனையடுத்து அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படம் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுவருகிறது. படம் மட்டுமின்றி அதில் நடித்த அஞ்சலிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அழகு மட்டுமின்றி திறமையான வெகு சில நடிகைகளில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் அவர்.

ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து ரசிகர்களை கவர்ந்த அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக திரையுலகிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின் சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி; அதனையடுத்து ஜெயம் ரவியுடன் சலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை.

இந்த சூழலில் மீண்டும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் தெலுங்கிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்தார். மேலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தமிழில் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்திருக்கிறார். கற்றது தமிழ் எப்படி அஞ்சலிக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்ததோ அதேபோல் இந்தப் படமும் பெரும் அடையாளமாக மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முக்கியமாக அஞ்சலி பார்த்த ரசிகர்கள் அவரின் ரீ எண்ட்ரி தரமாக இருக்கும் என்பதை இந்த க்ளிம்ப்ஸும், அஞ்சலியின் அழகும் உணர்த்துவதாக தெரிவித்தனர். அதேபோல் சமீபத்தில்தான் அவரது நடிப்பில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படம் வெளியானது. ஆனால் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் அஞ்சலி தனது 38ஆவது பிறந்தநாளை சில நாட்களுக்கு முன்பு கொண்டாடினார். இப்போது அந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன. அதன்படி, அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக தாய்லாந்து சென்றிருக்கிறார். அங்கு தான் தங்கியிருந்த ஹோட்டலில் மெத்தையில் படுத்தபடியும், பீச் மற்றும் ரெஸ்டாரண்ட்டில் வைத்தும் தனது பர்த்டேவை கொண்டாடியிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் 38 வயதானாலும் அஞ்சலிக்கு கிளாமர் இன்னும் போகலையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.