சீமான் வீட்டில் சிவகார்த்திகேயனுக்கு மதிய விருந்து!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று ஜூன் 20 ஆம் தேதி நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானை சந்தித்து இருக்கிறார். சீமான் வீட்டில் சிவகார்த்திகேயன் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது சினிமாவில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் சீமானை அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதால் அதைப் பார்த்த ரசிகர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சியில் சிவகார்த்திகேயன் இணைய போகிறாரா? அதனால் தான் இவர்களுடைய சந்திப்பு நடந்ததா? என்ற கேள்விகள் இணையத்தில் அதிகமாக கேட்கப்பட்டு வருகிறது.

இது குறித்து முக்கிய பிரபலம் ஒருவர் பேசிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர் பேசுகையில் கார்த்திகேயன் மற்றும் சீமான் சந்தித்தது அன்பு நிமித்தமாக நடந்த சந்திப்பு தான். சிவகார்த்திகேயனுக்கு சீமான் மேல் பெரிய மதிப்பும், மரியாதையும் இருக்கு. அதனால்தான் மிஸ்டர் லோக்கல் படத்தில் அவர் சிறைக்குப் போகிற காட்சியில், இங்கேதான் சீமான் அண்ணன், மன்சூர் அலிகான் அண்ணன் எல்லாம் இருந்தாங்க.. அவங்க எல்லாம் நமக்கு சீனியர் என்று ஒரு டயலாக் பேசி இருந்தார். அந்த அளவிற்கு சீமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கு அண்ணன் தம்பி உறவு இருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 8.2% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்ததற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதற்கு சீமான் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியிட்ட நன்றி அறிக்கையில் கூட சிவகார்த்திகேயன் தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு அந்த அறிக்கையில் “ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயனுக்கு நன்றி” என்று சீமான் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயனை இன்று மதிய விருந்திருக்கு சீமான் அழைத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க அன்பின் காரணமாக நடந்த சந்திப்பு தான். சிவகார்த்திகேயனுக்கு பிடித்த உணவுகள் பரிமாறப்பட்டன. அதுபோல சிவகார்த்திகேயன் சீமானின் மகனோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.