வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால், வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளதால் இதன் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.