“உங்களின் மதிப்பு வெற்றிகளால் நிர்ணயிக்கப்படும் ஒன்றல்ல. உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசு கிடைத்துள்ளது.அது எந்தவொரு சாதனையையும் பின்னுக்குத் தள்ளும் ஒரு ஆழமான அன்பு” என்று வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
தலைநிமிருங்கள் போராளியே. நீங்கள் ஏராளமானோருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள். உங்களின் மதிப்பு வெற்றிகளால் நிர்ணயிக்கப்படும் ஒன்றல்ல. உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசு கிடைத்துள்ளது. அது எந்தவொரு சாதனையையும் பின்னுக்குத் தள்ளும் ஒரு ஆழமான அன்பு. தலையை நிமிர்த்தி அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.