பின்னணி பாடகி பி சுசீலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னணி பாடகி பி சுசீலா சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி பி சுசீலாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும், வயிற்று வலியால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.