நான் எங்கும் ஓடி ஒளியவில்லை: மோகன்லால்!

நான் இங்கே தான் இருக்கிறேன், எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அம்மா சங்கம் குறித்து அவதூறு பரப்பாதீர்கள் என்று நடிகர் மோகன்லால் கூறினார்.

மலையாள திரையுலகில் பாலியல் சர்ச்சை கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் இத்தனை நாட்ளாக மவுனம் காத்து வந்த நடிகர் மோகன்லால், இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கியுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நடிகர் மோகன்லால் பேசியதாவது:-

நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை. மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் 2 முறை நான் தலைவராக இருந்துள்ளேன். அம்மா குழு கலைக்கப்பட்டாலும் அதன் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை. நான் இங்கே தான் இருக்கிறேன், எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அம்மா சங்கம் குறித்து அவதூறு பரப்பாதீர்கள். எல்லாவற்றுக்கும் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தை குறை சொல்வது சரியில்லை. மலையாள திரையுலகம் பாதிக்கப்பட கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.

பாலியல் புகார் தொடர்பாக ஹேமா கமிஷன் அறிக்கையை அளித்த நிலையில் அது குறித்த விவகாரத்தில் அரசு தனது வேலையை செய்யும். ஹேமா கமிட்டியை வரவேற்கிறேன். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. வயநாடு பேரிடர், கார்கில் போன்ற பிரச்சினைகளின் போது அம்மா சங்கம் பல்வேறு உதவிகளை செய்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் கடை நிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. சர்ச்சை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாலியல் புகார்கள் என்பது அனைத்து துறைகளிலும் கலையப்பட வேண்டும். பாலியல் புகார் குறித்து கேரள அரசும் நீதிமன்றமு்ம தங்கள் கடமையை செய்கின்றன. விசாரணைக்கு அழைத்து முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து என்னால் பேச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.