பிரதமர் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்: ரஜினி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மரியாதைக்குரிய, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி தெரிவித்துள்ளார்.