அவதூறு பரப்பியதாக லப்பர் பந்து நடிகை சுவாசிகா மீது வழக்குப்பதிவு!

நடிகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை கூறியதாக லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் மீது புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலையாளத் திரை உலகில் நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்து நடத்தப்பட்ட ஹேமா கமிட்டியை தொடர்ந்து மலையாள திரை உலகில் பல சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. இதில் பல முக்கிய நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஆலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக எடவேல பாபு, முகேஷ் மற்றும் ஜெயசூர்யா உள்ளிட்ட மேலும் சிலர் மீது காவல் துறையில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இந்த நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் புகார் அளித்த நடிகை குறித்து அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவதூறாக பேசினார். பட வாய்ப்பு தருவதாக தன்னையும் நடிகர்களிடம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என அவர் பேசியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் புகார் அளித்த நடிகை குறித்து லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, நடிகர் மனோஜ் ஆகியோர் யூட்யூப் சேனல் பேட்டி ஒன்றில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் மனோஜ் மாறும் பீனா ஆண்டனி ஆகியோர் கணவன் மனைவி ஆவர். இவ்வாறு அவதூறு பரப்பும் வகையில் பேசியதற்காக இவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த நடிகை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிதுள்ளார். இதன் அடிப்படையில் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.