புஷ்பா – 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா – 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்து திரையிடப்படுகிறது. கிட்டத்தட்ட 12,000 திரைகளில் வெளியாகும் படமென்பதால் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது, படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இப்பாடலின் தமிழ் வரிகளை விவேகா எழுத செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்.