பெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்புகளுக்கான நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
பெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெஞ்சல் புயல் பாதிப்புக்கு முதல் ஆளாக திரையுலகிலிருந்து சிவகார்த்திகேயன் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.