நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமான பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ என்கிற பெயரில் வீடியோ ஒன்று அசுர வேகத்தில் சோஷியல் மீடியவில் பரவி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவது போல தற்போது பிரக்யா நாக்ராவின் வீடியோ ஒன்று #pragyanagra ஹாஷ்டேக் உடன் டிரெண்டாகி வருகிறது. ஹரியானாவை சேர்ந்த பிரக்யா நாக்ரா தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழில் வெளியான N4 படத்திலும் பிரக்யா நாக்ரா நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான நதிகளில் சுந்தரி யமுனா படத்தில் நடித்த இவர், இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான லக்கம் படத்திலும் நடித்திருந்தார்.
25 வயதே ஆன பிரக்யா நாக்ரா தனது பாய் ஃபிரெண்டுடன் படுக்கையறையில் உடலுறவில் ஈடுபடுவதை போன்ற வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீடியோவும் டீப் ஃபேக் வீடியோவாகத்தான் இருக்கும் என்றும் டார்க் வெப் உலகில் இப்படி நடிகைகளை டார்கெட் செய்து மோசடி செய்து அவர்களது கரியரை காலி செய்து வருகின்றனர் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடிகை ஓவியாவுக்கும் இதே போன்ற டீப் ஃபேக் பிரைவேட் வீடியோ பிரச்சனை பெரிதாக வெடித்தது. ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஓவியாவின் அந்தரங்க வீடியோவை பார்த்தாக வேண்டும் என்கிற ஆர்வத்தை பச்சையாக வெளிப்படுத்தினர். இந்நிலையில், தற்போது அதே போல #pragyanagra ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பிரக்யா நாக்ராவின் க்யூட்டான போட்டோக்கள் மற்றும் லீக்கான வீடீயோவின் ஸ்க்ரீன் ஷாட்களை பதிவிட்டு இணையத்தை திக்குமுக்காட செய்து வருகின்றனர்.
இந்த திடீர் டிரெண்டை பார்த்து நடிகை பிரக்யா நாக்ரா என்ன சொல்லப் போகிறார் என்றும் அவரது விளக்கத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். போலியான ஃபேக் வீடியோவாக இருந்தால் கண்டிப்பாக சைபர் கிரைம் போலீஸார் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படியே பிரைவேட் வீடியோவாக இருந்தாலும், இப்படி பொதுவெளியில் லீக் செய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.