நமது வாழ்க்கை ரொம்பவே அற்புதமானது: கௌதமி!

கமல் ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கிடையே அவரும், கௌதமியும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் தாக்கத்தை தவிர்க்கவே முடியாது. 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் பிஸியாக இருக்கிறார். அப்படி அவர் தயாரித்த அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசன் இப்படி தொடர்ந்து சினிமாவில் மீண்டும் பிஸியாகியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கமல் ஹாசனை பொறுத்தவரை தனது பெர்சனல் வாழ்க்கையை தனக்கு தோன்றியபடி அமைத்துக் கொண்டவர். முதலில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்ட அவர் அடுத்ததாக நடிகை சரிகாவை திருமணம் செய்துகொண்டார். இரண்டு திருமண உறவுகளும் பாதியிலேயே முடிந்தது. அதனையடுத்து நடிகை கௌதமியுடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் இந்த லிவிங் வாழ்க்கையிலிருந்து கௌதமியும் வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் கௌதமி அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

டாக்சிக் ரிலேஷன்ஷிப்பின் அடிப்படையான விஷயம் என்னவென்றால் அதிலிருந்து வெளியே வர முடியாது. அதனால்தான் அது டாக்சிக்காக மாறுகிறது. அதில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. அந்த குறை உங்களால்தான் உருவாகியிருக்கும். அதில் நடக்கும் விரும்பத்தகாத விஷயங்கள் அனைத்தும் உங்களால்தான் நடக்கிறது என்று நினைக்கப்படும். இது காலங்காலமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். ஒருவருடன் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தால் அது டாக்சிக் ரிலேஷன்ஷிப்தான். டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில்தான் நாம் இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்வதற்கு நேரம் ஆகும். அதனை கண்டுபிடிப்பதுதான் முதல் கட்டம். அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைப்பது இரண்டாவது கட்டம். அதற்கு பிறகு அதிலிருந்து வெளியே வருவதற்கான வழியையும், நமக்குள் ஒரு வலிமையை உருவாக்கி வெளியே வருவது மூன்றாவது கட்டம். வெளியே வந்த பிறகு நமக்கான சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வது நான்காவது கட்டம்.

நமது வாழ்க்கை ரொம்பவே அற்புதமானது. அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களின் வாழ்க்கையை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், வாழ்வதற்கு எல்லா விதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் டாக்சிக் நிலையை உணரும்போது இந்த நிலை தன்னால் உருவாகிவிட்டதே என்று குறைபட்டுக்கொள்ள தேவையில்லை. நீங்கள் தவறான முடிவெடுத்துவிட்டீர்கள்தான். அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லைதான். பரவாயில்லை நீங்கள் இதை திட்டமிட்டு செய்யவில்லை. இது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கௌதமியின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் தங்களுக்குள் ஏகப்பட்ட கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது இந்தப் பேட்டியில் கமல் ஹாசனைத்தான் கௌதமி மறைமுகமாக சொல்கிறாரோ என்று ஓபனாகவே சமூக வலைதளங்களில் கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.