தனது பெயரைத் தவறாகப் பயன்​படுத்​தி​யதற்காக நடிகை சன்னி லியோன் கடும் கண்டனம்!

தனது பெயரைத் தவறாகப் பயன்​படுத்​தி​யதற்காக நடிகை சன்னி லியோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்​தில், ‘மஹ்​தாரி வந்தன் யோஜனா’ என்ற திட்​டத்​தின் கீழ் திரு​மணமான பெண்​களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்​கில் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.
இந்த திட்​டத்​தில் நடிகை சன்னி லியோன் பெயரில் தொடங்​கப்​பட்ட வங்கிக் கணக்​குக்கு மாதம் ரூ.1000 அனுப்​பப்​பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்​தனர். விசா​ரணை​யில், அம்மாநிலத்​தின் பஸ்தார் பகுதி​யில் உள்ள தலூர் கிராமத்​தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர், சன்னி லியோன் பெயரில் கணக்கை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெற்று மோசடி​யில் ஈடுபட்டது தெரிய​வந்​தது. அவர் மீது வழக்​குப்​பதிவு செய்த போலீ​ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை பெயரில் போலி கணக்கை உருவாக்கி அரசுத் திட்​டத்​தில் மோசடி செய்த விவகாரம், அம்மாநிலத்​தில் சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. இந்த மோசடி குறித்து பாஜக அரசை, காங்​கிரஸ் குறை கூறியது. ‘மஹ்​தாரி வந்தன் யோஜனா’ திட்​டத்​தின் கீழ் பணம் பெறும் 50 சதவிகித பயனாளிகள் போலி​யானவர்கள் என்று குற்றம் சாட்​டி​யுள்​ளது.

இந்நிலை​யில், தனது பெயரைத் தவறாகப் பயன்​படுத்​தி​யதற்காக நடிகை சன்னி லியோன் கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்​தில், “எனது பெயரை​யும் அடையாளத்​தை​யும் தவறாகப் பயன்​படுத்தி மோசடி​யில் ஈடுபட்​டிருப்பது துரதிர்​ஷ்ட​வச​மானது. பெண்​களுக்கு அதிகாரமளிக்​க​வும் அவர்கள் பயனடைய​வும் உருவான திட்​டத்​தில் இப்படியொரு மோசடி நடந்​திருப்பது வருந்​தத்​தக்​கது. இச்செயலை வன்மை​யாகக் கண்டிக்​கிறேன். இதுபற்றி முழு​மையாக விசாரிக்​கும் அதிகாரி​களின் முயற்சி​களுக்கு ஆதரவளிக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்ளார்.