கிறிஸ்துமஸ் தினமான இன்று என் மகன் செத்துட்டான்: திரிஷா!

கிறிஸ்துமஸ் தினமான இன்று தனது மகன் இறந்து விட்டதாக பிரபல நடிகை திரிஷா போட்ட பதிவால் ரசிகர்கள் பரபரப்படைந்துள்ளனர். செல்லப் பிராணிகள் மீது அன்பு கொண்ட திரிஷா தான் வளர்த்து வரும் நாய் இறந்ததை தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

மிஸ் சென்னை, சவுத் குயின் உள்ளிட்ட பல அழகி பட்டங்களை வென்ற திரிஷா மாடலிங் துறையில் கலக்கி வந்தார். தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்த அவர் அதற்கு பிறகு முன்னணி கதாபாத்திரங்களில் நடக்கத் தொடங்கினார். சாமி படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து கில்லி, கிரீடம் என கலக்கினார் திரிஷா. இதனையடுத்து அவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளும் உருவானது. அது இன்று வரை தொடருகிறது.

நடிகர்கள் விஜய், அஜித், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடனும், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இளம் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட சினிமாவிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

மிகவும் பிஸியான நடிகையாக வலம் வரும் அவர் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி, சூர்யா 45 ஆகிய படங்களிலும், ஆர் ஜே பாலாஜியின் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்திலும், மலையாளத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக ஐடென்டிட்டி படத்திலும் நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து வரும் திரிஷா, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் திரிஷா. அதுமட்டுமல்லாமல் விலங்கு ஆர்வலரான அவர் தனது வீட்டில் ஏராளமான செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார். குறிப்பாக ஸோரோ என்ற நாயை 2012 ஆம் ஆண்டு முதல் திரிஷா செல்லமாக வளர்த்து வருகிறார். அதனை நாய் என்று சொல்லாமல் ஸோரோவை தனது மகன் என்றே குறிப்பிடுவார் த்ரிஷா. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை திரிஷாவின் வளர்ப்பு நாயான ஸோரோ திடீரென உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரிஷா “தனது மகன் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை உயிரிழந்து விட்டார். என் வாழ்க்கை அர்த்தமாகிவிட்டது என்பதை என்னை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நானும் எனது குடும்பத்தினரும் உடைந்து போய் இருக்கிறோம். மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நிறைய நேரம் எடுக்கும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது வீட்டிலேயே ‘ஸோரோ’ அடக்கம் செய்யப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ள அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஸோரோவை திரிஷா வளர்த்து வரும் நிலையில் அந்த நாயின் மரணம் அவருக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவும், அவர் மீண்டு வர வேண்டும் எனவும் ரசிகர்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.