படத்தின் புரமோஷன் என்னை மிகவும் சோர்வாக்கியது: கிருத்தி சனோன்!

படங்களின் புரமோஷனுக்காக தொடர்ந்து பயணம் செய்தது தன்னை மனதளவில் பாதித்ததாக கிருத்தி சனோன் கூறினார்.

பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்த இவர், சமீபத்தில் ‘க்ரூ’ மற்றும் ‘டூ பட்டி’ படங்களில் நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் கிருத்தி சனோன், படங்களின் புரமோஷனுக்காக தொடர்ந்து பயணம் செய்தது தன்னை மனதளவில் பாதித்ததாக கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘படத்தின் புரமோஷன் என்னை மிகவும் சோர்வாக்கியது. நான் நடித்த ‘பேடியா’ பட புரமோஷனின்போது எனக்கு இது நடந்தது. அந்த வருடம், நான் நடித்த இரண்டு, மூன்று படங்கள் வெளியாகின. பேடியா படத்திற்காக தொடர்ந்து பல இடங்களுக்கு சென்றோம். அதுவும் இரவு நேரங்களில். இதனால் உறக்கம் குறைவாகவே இருந்தது. இதனால் ஏற்பட்ட சோர்வு என்னை மனதளவில் பாதித்தது’ என்றார்.