சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் அடையாளமாக உயர்ந்து நிற்கின்றார். இன்றைக்கு உலகமே 2025ஆம் ஆண்டினை வரவேற்றுக் கொண்டு இருக்கும் தருவாயில், அனைவருக்கும் தனது ஸ்டைலில் மாஸாகவும் கெத்தாகவும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவரது புத்தாண்டு வாழ்த்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாட்ஷா படத்தில் அவர் பேசும் மிகவும் வரவேற்பைப் பெற்ற வசனத்தைக் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதேபோல் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
