இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் ஜனவரி 3-ம் தேதி முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்தைக் கூறி உரையாற்ற ஆரம்பித்த பிரதமர் மோடி, ஜனவரி 2022 முதல் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். சுகாதாரப் பணியாளர்களுக்கான பூஸ்டர்கள் ஜனவரி 10, 2022 முதல் தொடங்கும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் ஜனவரி 10, 2022 முதல் வழங்கப்படும் என்றார்.
400000 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் இப்போதும் இருக்கிறது.
நாடு முழுவதும் 18 லட்சம் தனிமைப்படுத்துதல் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.
90,000 குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மோடி பேச்சு.
இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து நாட்டு மக்கள் அச்சம் கொள்ளாமலும் அலட்சியப் படுத்தாமலும் விழிப்புடன் இருக்க வேண்டும்
முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
இந்தியாவில் மேலும் பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.