ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா.

இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

இந்த விண்வெளி தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும். பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்தாட பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது. 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் திட்டத்தை முன்னின்று நடத்துவது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா. அதனுடன் இணைந்து ஐரோப்பிய விண்வெளி அமைப்பான ஈ.எஸ்.ஏ செயல்படுகிறது.