தமிழை போற்றினால் காவியையும் போற்ற வேண்டும்: ஆளுநர் தமிழிசை

தமிழை போற்றினால் காவியையும் போற்ற வேண்டும் என்று, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்துப் பேசினார். அடுத்து நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தும் பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ள நிலையில், ஆளுநர்கள் ஆர்.என்.ரவி தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், காவித் தமிழாகவே தமிழ் வளர்ந்தது என்றும் கருப்புத் தமிழாக வளரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழைப் போற்றினால் காவியையும் போற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல ஆதீனங்கள் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை என்ற ஆளுநர் தமிழிசை, தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விவகாரத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.