இமாச்சல பிரதேச சட்டப்பேரவை வாசலில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் உள்ள சட்டப்பேரவையின் பிரதான வாயிற்கதவுகள், சுற்றுச்சுவரில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடிகளை கட்டி உள்ளனர். பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு அல்லது நேற்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காலிஸ்தான் கொடிகளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தினர்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் வெளியிட்ட அறிக்கையில், ‘இரவோடு இரவாக, தர்மசாலாவில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் காலிஸ்தான் கொடியை கட்டி சென்ற கோழைத்தனமான சம்பவத்தை கண்டிக்கிறேன். இங்கு, குளிர்கால கூட்டத்தொடர் மட்டுமே நடக்கிறது. இச்சம்பவம் மூலம் இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது. பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி, கோழைகள் இச்செயலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தி. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்,’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சட்டபேரவைக்கே பாதுகாப்பு அளிக்க இயலாத அரசால், தேசத்தில் உள்ள மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்? இது இமாச்சலின் மரியாதை, தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது,’ என்று தெரிவித்துள்ளார்.
‘எஸ்எப்ஜே’ எனப்படும் ‘சீக்கியர்கள் நீதி’ அமைப்பு, அமெரி்க்காவில் இருந்து செயல்பட்ட போதிலும் இன்னும் அதற்கு தடை விதிக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து பஞ்சாப்பை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதன் செயல்பாடுகள் தற்போது உலகளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் .உளவுத்துறையான ஐஎஸ்ஐ. இதன் காரணமாக, சமீப காலமாக டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாபல ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்ட ‘காலிஸ்தான்’ என்ற தீவிரவாத அமைப்பு, சமீப காலமாக உயிர் பெற்று வருகிறது. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் செயல்படும் சீக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இந்த பூகம்பம் கிளம்புகிறது. அதற்கு வேண்டிய உதவிகளை செய்து, தூபம் போட்டு வருகிறது பாச்சல பிரதேச மாநிலங்களில் காலிஸ்தான் கோஷம் அதிகமாகி வருகிறது. மேலும், பயங்கர ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் சிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணி்க்கையும் அதிகமாகி இருக்கிறது. அரியானாவில் கடந்த வாரம் சிக்கிய 4 காலிஸ்தான் ஆதரவாளர்களிடம் இருந்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள், நவீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் 4 பேரும் ஐஎஸ்ஐ உளவுத்துறையின் ஆதரவுடன் இதை கடத்தி வந்துள்ளனர். இந்த ஆயுதங்கள் அனைத்தும், பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலமாக எல்லை தாண்டி வந்து வீசப்பட்டு, இவர்களுக்கு கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லை கிராமங்களில் சமீப காலமாக ஆயுதங்களை சுமந்து வரும் டிரோன்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதும், அவற்றை பாதுகாப்பு படைகள் துரத்துவதும், சுட்டு வீழ்த்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்றும் கூட சண்டிகரில் பஞ்சாப் போலீசாரிடம் சிக்கிய 2 காலிஸ்தான் ஆதரவாளர்களிடம் இருந்து 1.5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து சிக்கியுள்ளது. இரும்பு பெட்டியில் அடைக்கப்பட்டு, தாக்குதல் நடத்துவதற்கான தயார்நிலையில் இது கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவர்கள் சிக்கியதின் மூலம், முக்கிய நகரங்களில் நடத்தப்பட இருந்த பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.