இந்திய ரூபாய் மதிப்பு சரிவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மே 5 ஆம் தேதி டாலருக்கு ரூ. 76.90 ஆக இருந்த நிலையில், இன்று காலை டாலருக்கு ரூ. 77.42-ஆக குறைந்துள்ளது. இதன் மூலமாக டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்தத்தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே ‘டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. பிரதமர் மோடி இப்போது முதல்வராக இருந்திருந்தால், மத்திய அரசை தேச விரோத அரசு என்று கடுமையாக சாடியிருப்பார். இப்போது அவரே பிரதமர் என்பதால் அமைதியாக இருக்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.