மகிந்த ராஜபக்‌சே குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம்!

பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்‌ஷே குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள 35 அரசியல் தலைவர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன. அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்‌ஷேவின் வீடும் தீ வைக்கப்பட்டது. இதனால் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய அவர் குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மகிந்த ராஜபக்சே மகள் யசோதா விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார் என்பது தெரியவந்துள்ளது.