பைலட் மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவால் பைலட் மயங்கியதால் எந்த அனுபவமும் இல்லாத பயணி விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினார்.
வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாவில் இருந்து இரண்டு பயணியருடன் சிறிய ரக விமானம் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்த போது பைலட்டுக்க திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். இதைப் பார்த்த ஒரு பயணி விமானி அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு பேசி விபரத்தை கூறினார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசியவர் அந்தப் பயணிக்கு விமானத்தை இயக்கும் வழிமுறைகளை கூறி அவரை வைத்தே இயக்கினார். பயணியும் எந்தப் பயமும் இன்றி கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் அறிவுரைப்படி இயக்கி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
அந்தப் பயணியையும் கட்டுப்பாட்டு அறை அதிகாரியையும் அனைவரும் பாராட்டினர்.