தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 எம்பி இடங்கள் விரைவில் காலியாக உள்ளது. மொத்தம் 15 மாநிலங்களில் எம்பி இடங்கள் காலியாக இருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவை (லோக்சபா) எம்பிக்களுக்கு நேரடியாகவோ, மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவிகளுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மூலம் மறைமுகமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. இவர்களில் மக்களவை எம்பிக்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகவும், மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகவும் உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு 2024 இல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கான ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனையடு்தது இந்த பதவிக்கு புதிய எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி தமிழகம், கர்நாடகம், தெலங்கானா உள்பட 15 மாநிலங்களில் மொத்தம் காலியாக உள்ள 57 எம்பி இடங்களுக்கு ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.