அமெரிக்காவில் பால்பவுடருக்கு தட்டுப்பாட்டு: தாய்ப்பால் விற்பனை செய்த இளம்தாய்!

உலக நாடுகளின் வல்லரசான அமெரிக்காவில், பால்பவுடருக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தாய்ப்பால்தான் குழந்தைகளின் உணவும் மருந்தும் ஆகும். இனி வரும் நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதும், ஏற்கனவே வந்த நோயை அழிப்பதும் இந்த தாய்ப்பால் தான். ஒரு பெண், தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும்போது, அவளுக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்பெறுகிறது…. நெருக்கமும் பாசமும் அதிகரிக்கிறது. அதனால்தான் தாய்ப்பால் தினம் என்று ஒருநாளையே இதற்காக சிறப்பித்து கொண்டாடி வருகிறோம். எனினும், தாய்ப்பாலுக்கு தட்டுப்பாடு என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய நிகழ்வாகும். தாயின் உடல்நலம் குன்றிய சூழலில், இந்த தாய்ப்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். இதையும்கூட நிவர்த்தி செய்யும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில், ஒரு புதிய சம்பவம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல குடும்பங்களும் தங்களது பச்சிளம் குழந்தைகளுக்கு பால் பவுடரைதான் முக்கிய உணவாக தந்து வருகின்றனர்… இந்த பால்பவுடருக்கும் அங்கு திடீரென தட்டுப்பாடு வந்துவிட்டது. அதாவது, பால் பவுடரை தயாரித்து வந்த முன்னணி நிறுவனம் ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியதுடன், அந்த ஃபேக்டரியை இழுத்து முடியதே இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதன் விளைவாக அமெரிக்காவில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பேபி ஃபார்முலா என்ற பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.. அப்போதுதான் அலிசா சிட்டி என்ற பெண் தன்னுடைய தாய்ப்பாலை விற்க முன்வந்தார். இவர் யூடாவை சேர்ந்தவர். கிட்டத்தட்ட 118 லிட்டர் விற்றுள்ளார்..

இவர் ஒரு இளம் தாய். இவருக்கு தாய்ப்பால் அதிகமாக சுரந்து வந்துள்ளது. அதை வீணாக்கிவிடாமல், சேகரித்து வைத்ததுடன், அது கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக ஃப்ரீஸரில் வைத்து தேவைப்படுவோருக்கு தந்து கொண்டிருக்கிறாராம். அதாவது, ஒரு அவுன்ஸ் தாய்ப்பால், ஒரு டாலருக்கு விற்கிறாராம். தாய்ப்பாலை விற்று ஏராளமான பச்சிளம்குழந்தைகளின் பசியை போக்கியதுடன், பல குடும்பங்களின் வயிற்றிலும் பாலை வார்த்துள்ளார் அலிசா சிட்டி..!