வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, திராப் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் பேசியதாவது:-
கடந்த 2014 முதல் 2012ம் ஆண்டு காலத்தில் வடகிழக்கு மற்றும் டில்லிக்கு இடையே இருந்த பிரச்னைகளை பிரதமர் மோடி தீர்த்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை. ஆனால், அந்த மொழிகளுக்கு பிரதமர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
போடோலாந்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் இடையிலான எல்லை பிரச்னைகளில் 60 சதவீதத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.