ட்ரோன் என்கிற ஆளில்லா விமானத்தின் தொழில்நுட்பம் தொடா்பாக காணப்படும் ஆற்றலும், உற்சாகமும் உலகின் மிகப்பபெரிய நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா முன்னேறுகிறது என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
டெல்லி பிரகதி மைதானத்தில் ‘பாரத் ட்ரோன் மேஹாத்சஸவ் 2022’ என்ற நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழா நேற்று தொடங்கியது. 2 நாள் நைடபெறும் இந்தத் திருவிழாவில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், முப்படையினா், மத்திய ஆயுதப்படையினா், பொதுத்துறை, தனியாா் துறையினா், ட்ரோன் தொழில் முனைவோர் என சுமாா் 1,600 போ் கலந்து கொண்டனா். இந்த விழாவை தொடக்கி வைத்துப் பிரதமா் மோடி பேசியதாவது:-
நான் இந்த ட்ரோன்களின் கண்காட்சியைப் பாா்த்ததும் மெய்சிலிா்த்துவிட்டேன். நான் 10 சதவீத விஷயங்களைத்தான் பாா்த்தேன். ஆனால், மிகவும் ஈா்க்கப்பட்டே ன். ட்ரோன்கள் மூலம் தங்கள் வணிகத்தை பிரமிப்புடன் நடத்துகின்றனா். குறிப்பாக, வேளாண்மையில் ட்ரோன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் பல இளம் விவசாயிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிைடத்தது. இந்தப் பொறியாளா்களுடன் கலந்துரையாடும் போது, ட்ரோன் தொழில் நுட்பம் தொடா்பாக நமது நாட்டில் காணப்படும் ஆற்றலையும், உற்சாகத்தையும் வெளிப்படையாகக் காண முடிந்தது. நாட்டில் அதிகபட்சமாக வேலைவாய்ப்பை உருவாக்கும் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை இது காட்டுகிறது. இதனால், ட்ரோன் தொழில் நுட்பத்தில் உலகின் மிகப் பெரிய
நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா நகா்கிறது.
8 ஆண்டுகளுக்கு முன்பு நாம் புதிய தொடக்கத்தைத் தொடங்கும் போது, நாட்டில் நல்லாட்சிக்கான புதிய மந்திரங்களைச் செயல்படுத்தத் தொடங்கினோம். ‘குறை ந்தபட்ச அரசு – அதிகபட்ச நிா்வாகம்’ என்கிற பாதையை பின்பற்றி எளிதாக வாழ்வதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் முன்னுரிமை
அளித்துள்ளோம். ‘சப்காசாத் சப்காவிகாஸ்’ என்கிற பாதையில் அனைத்துக் குடிமக்களையும் வசதிகள், நல்வாழ்வு திட்டங்களால் இணைத்திருக்கின்றோம்.
பிரதம மந்திரி ஸ்வாமித்வா யோஜனா திட்டம், ட்ரோன் தொழில் நுட்ப உதவியுடன் மிகப்பெபரிய புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் முதன்முறையாக கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சொத்துகளும் டிஜிட்டல் மேப்பிங் முறையில் வரைபடமாக்கப்பட்டு சொத்துகளுக்கான அட்டைகள் மக்களுக்கு
வழங்கப்படுகின்றன. இதுவரை 65 லட்சம் சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நட்டில் தற்போது கிராமப்புறங்கள், விவசாயம், விளையாட்டு மைதானம், பாதுகாப்பு, கும்ப மேளா போன்ற கூட்டங்களை கண்காணித்து கட்டுப்படுத்தல், போக்குவரத்து கட்டுப்பாடு, பேரிடா் மேலாண்மை போன்ற துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு இருந்த சில கட்டுப்பாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தளா்த்தியுள்ளது. இவ்வாறு பிரதமா் மோடி பேசினார்.