ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 மாதங்களுக்கும் மேலாக போர் தொடரும் நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டித்து ரஷ்யாவிலுள்ள மெக்டொனா்லட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளன. இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புடின், “வெளி நாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். அந்நிறுவனங்களின் வெளியேற்றத்தால் உள்நாட்டு வணிக நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். இதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்’ இவ்வாறு அதிபர் புடின் தெரிவித்தார்.