டெஸ்லா நிறுவனத்தில் 10 சதவீதம் ஆட்குறைப்பு செய்ய அதன் நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனர் எலான் மஸ்க் கூறியதாவது:-
பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட்டலாம் என உள்ளுணர்வு உள்ளது. இதனை சமாளிக்க டெஸ்லாவில் தற்போதுள்ள ஊழியர்களில் 10 சதவீதம் ஆட்குறைப்பு திட்டமிட்டுள்ளோம். வீட்டில் இருந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். இனி, வாரத்திற்கு 40 மணி வேலை நேரம் . தவறியவர்கள் வேலையை விட்டுச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.