பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு சன்னா மரின் (வயது 36), உடல் வெப்பநிலை அதிகரித்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் லேசான அறிகுறிகளே இருப்பதாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சன்னா மரின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “நேற்று முன்தினம் இரவு எனக்கு உடல் வெப்பநிலை அதிகரித்தது. காலையில் நான் கொரோனா பரிசோதனை செய்தேன். அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அறிகுறிகள் லேசானவை மற்றும் நான் நன்றாக உணர்கிறேன். அதிக பயணங்களின் காரணமாக நான் வழக்கமான வீட்டு பரிசோதனைகளை செய்தேன். இந்த வார தொடக்கத்தில் எனது சோதனைகள் எதிர்மறையாக இருந்தன” என்று தெரிவித்துள்ளார்.