44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து சீனா திடீர் விலகல்?

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா தானாகவே விலகுவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக 2014, 2018 ஆம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது. குறிப்பாக,சீன மகளிர் அணியினர் இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் தங்கம் வென்றிருந்தனர். இந்த நிலையில்,44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. அதே சமயம் உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஏற்கனவே ரஷ்யா அணிக்கு செஸ் ஒலிம்பியாட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு தங்க பதக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.