பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, மாதம் 300 யூனிட் இலவச மின்சார திட்டம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
பஞ்சாபில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதன் தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தாக்கல் செய்த 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சுகாதாரம், விவசாயம், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயிர் கழிவுகளை எரிக்கும் பிரச்னைக்கு தீர்வு காண ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் பேசிய நிதி அமைச்சர் சீமா, “பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அளித்த முதல் வாக்குறுதியின்படி, மக்கள் அனைவருக்கும் ஜூலை 1ம் தேதி முதல் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தொடர்ந்து இலசவச மின்சாரம் வழங்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.