ரஷ்யாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவும் பொருளாதார தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், மகள் ஆஷ்லே உள்ளிட்ட 25 பேர் ரஷ்யாவில் நுழைவதற்கு தடை விதித்து அதிபர் புதின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய எதிர்ப்பு உணர்வினை ஏற்படுத்தியதாக குடியரசு கட்சி எம்.பி.க்கள் மிட்ச் மேக்கனல், சூசன் காலின்ஸ், பென் சாசே, ஜனநாயக கட்சி எம்.பி. கிறிஸ்டின் ஜில்லிபிராண்ட் ஆகியோருக்கும் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.