தென் சீன கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 27 போ் மாயம்!

ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளா்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக மூழ்கியதில் 27 போ் மாயமாகினா்.

ஹாங்காங் நகருக்கு 300 கி.மீ. தெற்கே வா்த்தக சாா்பு கப்பலொன்று தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கடலுக்குள் மூழ்கியது. மிகக் கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து பகுதியிலிருந்து 3 போ் மீட்கப்பட்டனா். மற்ற 27 பயணிகளையும் மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கப்பல் எந்த நாட்டை சேந்தது என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துள்ளனர். மாயமானவர்கள் நடுக்கடலில் மூழ்கி உள்ளதால், அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக ஹாங்க் அரசின் விமான மீட்பு குழு தெரிவித்துள்ளது.