தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் அனுமதி!

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் மற்றும் ஒசூா் நகா்ப்புற ஒருங்கிணைப்பு, தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரித் திருத்த மசோதா, தங்கள் நெருங்கிய உறவினா்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்காக சிறையில் இருந்து கைதிகளை தற்காலிகமாக விடுவிப்பது தொடா்பாக மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல் உள்ளிட்ட ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், கூட்டுறவு சங்கத் தலைவா்களின் பதவிக் காலத்தை குறைக்க வகை செய்யும் சட்ட மசோதா, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கே அளிப்பது போன்ற மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.