இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார்.

நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. பின்னர் அடுத்தடுத்து கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமரை கட்சி விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக அறிவித்துள்ளதையடுத்து., உயரிய இந்த பதவிக்கு இந்தியரும், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகலல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பெருந்தொற்றை சரிவர கையாளாதது, கொரோனா காலத்தில் பார்ட்டி கொண்டாடியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு துணைத் தலைமைக் கொறடா கிறிஸ் பின்சர் மீது தாமதமாக நடவடிக்கை என்று அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமது தலைமையிலான அமைச்சரவையில் இருந்து அடுத்தடுத்து 40 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்ததும் அவர் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் துறந்ததையடுத்து, அந்த உயரிய பதவிக்கு வர இந்தியரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக்குக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியில் நிதி துறை அமைச்சராக இருந்த இவர், அண்மையில் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா காலத்தில் பல்வேறு வரிகளை உயர்த்தியது. இவரது மனைவியும், பிரிட்டன் தொழிலதிபருமான அக்சதா மூர்த்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது என்று ரிஷி சுனக் மீது பல்வேறு விமர்சனங்கள் அண்மையில் எழுந்தபோதும், தற்போதைய அரசியல் சூழலில் பிரிட்டன் பிரதமராக அவருக்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.