அமெரிக்க நாடாளுமன்றம் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது ட்ரம்ப் தான்!

அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேபிட்டோல் மீது கடந்த ஆண்டு அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குண்டர்களை ஏவிவிட்டு திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேபிட்டோல் மீது ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து சான்று அளிக்கும் பணியில், நாடாளுமன்ற ஊழியர்கள் ஈடுபட்டு இருந்த போது, உள்ளே புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை ட்ரம்ப் திட்டமிட்டே நடத்தினார் என்று விசாரணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் நடப்பதை உணவு அருந்தும் அறையில் அமர்ந்தபடி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே ட்ரம்ப் ரசித்துக் கொண்டு இருந்தார் என்று விசாரணைக்குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.