அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பைடனுக்கு தொற்று இருப்பது தெரியவந்ததாக அமெரிக்க அதிபரின் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டுள்ள ஜோ பைடன், இரண்டு முறை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளார். ஜோ பைடன் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தான பாக்ஸ்லோவிட் மாத்திரையையும் போட தொடங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் வெள்ளை மாளிகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.