அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜிவ் லாவ்ரவ் உடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ அடக்குமுறை தொடங்கிய பின் ரஷ்ய வெளியுறவு துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும். அங்கு பிரிட்னே கிரினே மற்றும் பால் வீலன் ஆகிய 2 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க கோரி கடந்த சில வாரங்களுக்கு முன்னரே கோரிக்கை வைக்கப்பட்டது. கூடைப்பந்தாட்ட வீரர் பிரிட்னே போதைப்பொருள் தொடர்பான விவகாரத்தில் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை உக்ரைன் விவகாரம் குறித்து இருக்காது எனவும் கூறினார். இதற்கு பதிலாக அமெரிக்காவில் சிறையில் 25 ஆண்டுகளாக உள்ள பவுட் என்ற ரஷ்ய நாட்டவரை விடுவிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.