நாளை முதல் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு செயலியில் வருகைப் பதிவு!

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று குறையர்க் தொடங்கியதைத் தொடந்து, பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள் தாமதமாக வருவதாகவும், பள்ளி மாணவர்கள், வகுப்புகள் நடைபெறும்போதே சுவர் ஏறி குதித்து வீடு திரும்புவது போன்ற செயல்களில் ஈடுப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இவற்றை தடுக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை தமிழக பட்ஜெட்டில் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது. அதனை நாளை முதல் செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. TNSED ஆப் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இனி TNSED செயலியில் மட்டுமே வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலி வருகை பதிவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. லீவ் பதிவு விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை இந்த செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது பற்றி ஏற்கனவே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் செயலி வழி வருகைப் பதிவு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த ஆப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் உள்ளிடப்படும் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து காலம்களும் இந்த செயலியில் தற்போது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உள்ளிடுவதற்கான தொகுதிகள், மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதற்கான தொகுதிகள், பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கான தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான தொகுதிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.