சீனாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா கடற்கரை, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடம். இங்கு, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடுமிடமான சன்யா ‘பிக்னிக் ஸ்பாட்’டில், நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 470 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பகுதியில், நேற்று ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. அங்குள்ள ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்த பிறகே கிளம்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இதனால், அங்கு தங்கியுள்ள 80 ஆயிரம் சுற்றுலாப் பயணியர், தங்கள் ஊர்களுக்கு உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.