ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திடீர் பயணமாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இன்னமும் முடிந்தபாடில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்க நாடும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தபோதும் இந்த உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. ஆனால் உக்ரைன் நாடோ அடிபணிய முடியாது என்ற திட்டவட்டத்துடன் தொடர்ந்து போராடி வருகிறது. இவ்வாறாக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் சூழலில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீர் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரது திடீர் பயணம் குறித்து இந்தியா இதுவரை எந்த தகவலையும் கூறவில்லை. குறிப்பாக அவர் பாதுகாப்பு சூழல் குறித்து பேசவே சென்றதாக தெரிகிறது.
ரஷ்யா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கு ரஷ்ய நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிக்கோலாய் பட்ருசேவை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் பிராந்திய பாதுகாப்பு சூழல், ஆப்கானிஸ்தான் பிரச்சினை போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய ரஷ்யா பாதுகாப்பு துறையில் உள்ள இருதரப்பு ஒப்பந்தம், பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்யா மற்றும் இந்தியாவின் வளர்ச்சியை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும், தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை தொடர்வது தொடர்பாகவும் இரு அதிகாரிகளும் பேசியதாக கூறப்படுகிறது. உலக அளவில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்தும் இரு அதிகாரிகளும் பேசிக்கொண்டதாக ரஷ்ய தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திடீர் பயணமாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றுள்ளது பெரிதாக பார்க்கப்படுகிறது. றிப்பாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இந்தியா அங்கு வாங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யா செல்வது குறித்தும் அங்கு ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் நிக்கோலோய் பட்ருசேவை சந்திப்பது குறித்தும் இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. ரஷ்யா தரப்பில் இருந்தே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.