காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியால் உயிர் தர முடியுமா: வானதி

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியால் உயிர் தர முடியுமா என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிர் அணி தலைவியுமான வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும் தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. இந்த நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை கொடுத்து நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். ராகுலின் நடைப்பயணத்தை பாஜகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள். ராகுல் நடைபயணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் பாஜகவுக்கும் பலன் கிடைக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 450க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக பெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராகுலின் நடைபயணத்தை வானதி ஸ்ரீனிவாசனும் கிண்டல் செய்துள்ளார். தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்றைய தினம் கோவையில் குனியாமுத்தூரில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் மூலம் உயிர் தர முடியுமா. ஆனால் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோடியின் செயல்பாடுகளால் பாஜகவுககு வந்துவிட்டனர். கட்சியை மீட்பதற்காக கட்சியை மீட்பதற்காக ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி ஓடி போனாலும் சரி மாரத்தான் செய்தாலும் சரி அதனால் எந்த பயனும் இல்லை. ராகுல் காந்தியின் உடல்நலத்திற்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் நாட்டுக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ ஒரு போதும் பயனில்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.