பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி 8 சிறுத்தைகளை காட்டில் திறந்து விட்டார்!

நமீபியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை தனது பிறந்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச காட்டுக்குள் திறந்து விட்டார்.

நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948 ஆம் ஆண்டில் இறந்தது. இதையடுத்து, 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20 ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்குகிறது.

இந்த சிறுத்தைகள், மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்காக, நமீபியா சென்றடைந்த தேசிய விலங்கான புலி வடிவில் டிசைன் செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் இந்த சிறுத்தைகள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, இன்று (செப்., 17ம் தேதி) காலை அந்த வந்தடைந்தது. அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேச மாநிலத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான இன்று, இந்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார்.

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரசாரத்தில் ஒப்பற்ற கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் கூடிய உங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புகிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆரோக்கியமான உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கூறிஉள்ளார்.

ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறிஉள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திய கலாச்சாரத்தின் வழியாக நமது நாட்டை ஒவ்வொரு துறையையும் அதன் வேர்களுடன் இணைத்து முன்னேற்றி வருகிறார். மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உலக வல்லரசாக இந்தியா உருவாகி வருகிறது. உலகமே மதிக்கும் தலைவராக மோடி தனது முத்திரையை பதித்துள்ளார், என்று கூறிஉள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் நரேந்திரமோடி மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும், நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.