ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லுசன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனே வெளியேற வேண்டும். ரஷ்யாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்பட 4 நாடுகள் புறக்கணித்தது. ஐ.நா. சபை தீர்மானத்திற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.