கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி: 3 பேர் கைது!

கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பெண்கள் நரபலி, உடல் துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்துள்ளார். அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின் என்பவரும் லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பத்தினம்திட்டாவில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர், இவர்கள் இருவரையும் விரைவில் பணக்காரர்கள் ஆகும் நோக்கில் நரபலி கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டுபிடித்த கேரள போலீசார் நரபலி கொடுத்த தம்பதி மற்றும் இடைத்தரகர் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மாவின் உறவினர்கள், அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளனர். ஆனால், பத்மாவின் தொலைபேசிக்கு தொடர்பு கிடைக்காததால், கொச்சி காவல்துறையில் செப்டம்பர் 27-ல் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பத்மாவின் தொலைபேசி சிக்னலை ஆராய்ந்த போலீசார் கடைசியாக பத்தினம்திட்டா மாவட்டம் திருவலா பகுதியோடு சிக்னல் நின்றதை தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் விசாரணையில், திருவலா பகுதி தம்பதியால் பத்மாவும், நோஸ்லின் என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் அம்பலமானது.

இதுகுறித்து கொச்சி காவல் ஆணையர் கூறுகையில், கொல்லப்பட்ட இரு பெண்களின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு தடவியல் துறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இரண்டு பெண்களின் போன் ரெக்கார்டை வைத்து அவர்கள் முகமது ஷாபி என்ற இளைஞரிடம் பேசி வந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு பெண்களும் முகமது சாபி என்ற இளைஞரிடம் பேசியது பின்னர் சிசிடிவி கேமராக்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டது. சாபிதான் இவர்கள் இருவரையும் கனெக்ட் செய்யும் புள்ளி என்பது தெரிய வந்துள்ளது. இவரை கண்டுபிடித்த போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்தது தெரிய வந்துள்ளது. பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது. இவர்களின் வீட்டிற்கு அருகில்தான் பத்மாவின் உடல் கிடைத்துள்ளது. அந்த உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது. இன்னொரு பெண்ணான ரோஸ்லி உடல் முழுவதாக எரிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இவர்களை எப்படி நரபலிக்கு அழைத்து வந்தேன் என்று சாபி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இரண்டு பெண்களுக்கும் வேலை கொடுப்பதாக சாபி கூறியுள்ளார். முதலில் அந்த பெண்கள் மறுத்துள்ளனர். பின்னர் இது வீடியோவில் லாட்டரி விற்பது போன்ற ஒரு காட்சிக்கான வீடியோ. இதற்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறி அந்த பெண்களை அழைத்துள்ளார். அவர்களை பகவான் சிங் வீட்டிற்கு அழைத்து சென்று, பின்னர் கட்டிப்போட்டு, நரபலி கொடுத்துள்ளனர். முதல் பெண்ணை ஜூன் மாதமும், இரண்டாவது பெண்ணை செப்டம்பர் மாதமும் நரபலி கொடுத்துள்ளனர். இதில் ரோஸ்லி உடலை மட்டும் எரித்து, சாம்பலாக்கி பூஜை எல்லாம் செய்துள்ளனர். சாகிப் என்ற இளைஞர்தான் பகவான் சிங்கை தொடர்பு கொண்டு நரபலி பற்றி பேசி உள்ளார். பகவான் சிங் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவது தெரிந்து பேஸ்புஸ்க்கில் அவரை சாகிப் தொடர்பு கொண்டு பேசி, நரபலி கொடுப்பது பற்றி அறிமுகம் கொடுத்துள்ளார். அவர்தான் பின்னர் சாபியின் தொடர்பு எண்ணை கொடுத்து பேசி உள்ளார். இப்படித்தான் சாபி, பகவான் சிங்கையும், அவரின் மனைவியையும் சந்தித்துள்ளார்.

பகவான் சிங் மிகவும் பொருளாதார கஷ்டத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நரபலி கொடுங்கள் உங்களுக்கு கோடி, கோடியாக பணம் கொட்டும் என்று சாகிப் ஆசை காட்டி உள்ளார். பின்னர் நேரில் பேசிய சாபியும் இதே போல ஆசை காட்டி உள்ளார். அதன்பின்தான் இவர்கள் நரபலிக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இரண்டு பெண்களை, குறிப்பிட்ட இடைவெளியில் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறி, இந்த இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.